Images
  • Malaysia
    படம்: REUTERS 

விடிவுகாலத்துக்குத் தயாராகும் ஆசிய விமான நிறுவனங்கள்

COVID-19 கட்டுப்பாடுகளால் பல பில்லியன் டாலர் இழப்புகளைச் சந்தித்துள்ள விமான நிறுவனங்களுக்கு விடிவுகாலம் பிறக்கத்தொடங்கியுள்ளது.

உலக நாடுகள் பல பாதுகாப்பான விமானச் சேவைகளைத் தற்போது அனுமதிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஆசிய நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு இது புதுத் தெம்பைத் தந்துள்ளது.

விமானப் போக்குவரத்து மெல்ல மெல்ல மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளன.

பயண முகவர்களும் முழுவீச்சில் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியாவிலும் வியட்நாமிலும் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவைகளில் பயணிகள் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு இல்லை.

சிங்கப்பூர், தாய்லந்து, ஃபிஜி ஆகியவை சில நாடுகளின் பயணிகளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத பயண அனுமதிகளை வழங்கியுள்ளன.

சில விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்க்கச் சலுகைகளை வழங்கியிருப்பதோடு கட்டணங்களையும் குறைத்துள்ளன.

- Reuters 

Top