Images
  • strawberry
    (படம்: Pixabay)

ஆஸ்திரேலியா: ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசிகள் வைத்த நபர்களைக் கண்டுபிடித்தால் 71,500 டாலர் வெகுமதி

பெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட சில ஸ்ட்ராபெர்ரி பழங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

அந்த நாச வேலையில் ஈடுப்பட்ட நபர்களை அடையாளங்காண உதவுவோருக்கு 71,540 டாலர் வெகுமதி வழங்க குவீன்ஸ்லந்து மாநிலம் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கையாகப் பழங்களை நறுக்கி உண்ணுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறு விற்பனைச் சின்னங்களின்கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களில் ஊசிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

நாச வேலையில் ஈடுபட்டுள்ளோர், குழந்தைகளின் உயிருக்கும் சிறு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாகக் கூறப்பட்டது.

குவீன்ஸ்லந்து மாநிலத்தில் ஸ்ட்ராபெர்ரிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் அந்தத் துறை 130 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டித் தருகிறது. 



Top