Images
  • australia
    படம்: Reuters/David Gray

ஆஸ்திரேலியா: பலத்தக் காற்றால் 25க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான காற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வீசிய பலத்தக் காற்றால் சிட்னி விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.  அனைத்துலக விமானச் சேவைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று சிட்னி நகரை இன்று அலைக்கழிக்கும் என அஞ்சப்படுகிறது.


Top