Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆஸ்திரேலியா: பாலியிலிருந்து விமானத்தில் கடத்தப்பட்ட அணில்கள் பறிமுதல்

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இரண்டு உயிருள்ள அணில்களைப் பயணப்பெட்டியில் கடத்திய ஆஸ்திரேலிய ஆடவரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: பாலியிலிருந்து விமானத்தில் கடத்தப்பட்ட அணில்கள் பறிமுதல்

படம்:Pixabay

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இரண்டு உயிருள்ள அணில்களைப் பயணப்பெட்டியில் கடத்திய ஆஸ்திரேலிய ஆடவரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளார்.

அவர் இந்தோனேசியாவின் பாலித் தீவிலிருந்து வந்தார். கடந்த வாரம் விமான நிலையத்தில் அந்த அணில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கக்கூடும்.

இரண்டு அணில்களும் கருணைக் கொலை செய்யப்பட்டன. அவை உயிரியல் சார்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்கியதால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அந்த முடிவை எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவோருக்கு அபராதமோ 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை (Australian Border Force) தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்