Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து டிரம்ப்பிற்கு ஆலோசனை கூற மறுக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்

துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு ஆலோசனை வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் மறுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து டிரம்ப்பிற்கு ஆலோசனை கூற மறுக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்

படம்: REUTERS/Kevin Lamarque

மெல்பர்ன்: துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு ஆலோசனை வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் மறுத்துள்ளார்.

அமெரிக்கப் பள்ளியில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ஆஸ்திரேலியாவிடம் ஆலோசனை கேட்டிருந்தது.

துப்பாக்கி தொடர்பான வன்செயல்களைக் குறைக்க ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகள் நல்ல பயனை நல்கின.

1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிப் படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மிகக் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அங்கு அமல்படுத்தப்பட்டன.

அன்றிலிருந்து அங்கு எந்த மோசமான படுகொலைச் சம்பவங்களும் ஏற்படவில்லை. வெவ்வேறு வரலாற்று, சட்டப் பின்னணிகளை இருநாடுகளும் கொண்டுள்ளதால் துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்க மறுத்துள்ளார் ஆஸ்திரேலியப் பிரதமர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்