Images
  • ayodhya
    (படம்: REUTERS/Pawan Kumar/Files)

இந்தியா: அயோத்தி விவகாரத்தில் இன்று தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சர்ச்சைக்குரிய அயோத்தி நகர இடம் யாருடைய கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பது குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று பின்னேரம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

ராமஜென்மபூமியும் பாப்ரி (Babri) மசூதியும் அமைந்திருந்த இடம் எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் உரிமை கோரி வருகின்றனர்.

அதன் தொடர்பில் பதற்றநிலை அதிகரித்துள்ள வேளையில், மக்களை அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி,Twitter-ரில் பதிவு செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றியாகவோ, தோல்வியாகவே கருதப்படக்கூடாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறை சுமார் 500 பேரைக் கைதுசெய்துள்ளது.

சமூக ஊடகப் பதிவுகளின் தொடர்பில், மேலும் 70 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அமைதியை நிலைநாட்ட, 5,000க்கும் அதிகமான துருப்பினரும் காவல் அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

Top