Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அயோத்தி விவகாரம் - பொதுமக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவின் அயோத்தி நகரில் கடுமையான பாதுகாப்பு அமலில் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமையாக இருக்கும்படிப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அயோத்தி விவகாரம் - பொதுமக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்

(படம்: REUTERS/Danish Siddiqui)

இந்தியாவின் அயோத்தி நகரில் கடுமையான பாதுகாப்பு அமலில் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமையாக இருக்கும்படிப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அயோத்தியில் அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலத்தை இந்துக்களிடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பளித்ததையடுத்து நகரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் புனிதத் தலத்திற்கு உரிமை கோரி சில நூற்றாண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சர்ச்சை நிலவியது.

இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் அது என்பது இந்துக்கள் பலரின் நம்பிக்கை.

பாபர் எழுப்பிய மசூதி அங்கிருப்பதால் அது தங்களுக்குச் சொந்தம் என்று முஸ்லிம்கள் கூறினர்.

இந்துக்களிடம் நிலத்தை ஒப்படைக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

அதற்குப் பதில் முஸ்லிம்களுக்கு அயோத்தியின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது; அங்கு அவர்கள் மசூதியைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்