Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஓரினப் பாலூறவு காணொளி சர்ச்சை: பொறுப்புகளில் இருந்து விலகப்போவதில்லை - மலேசிய பொருளியல் அமைச்சர்

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி (Azmin Ali) அரசாங்கத்திலும், ஆளும் பக்கட்டான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் பொறுப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஓரினப் பாலூறவு காணொளி சர்ச்சை: பொறுப்புகளில் இருந்து விலகப்போவதில்லை - மலேசிய பொருளியல் அமைச்சர்

படம்: Bernama

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி (Azmin Ali) அரசாங்கத்திலும், ஆளும் பக்கட்டான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் பொறுப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளி தொடர்பான சர்ச்சையில் சிக்கிகொண்டுள்ள அவர் அவ்வாறு கூறினார்.

விசாரணை நடைபெற்று வரும் வேளையில், பொறுப்பில் இருந்து விலகியிருக்குமாறு சிலர் அவரைக் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கவிருப்பதாகவும், அதில் யாரும் தலையிடமாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் திரு அஸ்மின் அலி சொன்னார்.

இதற்கிடையே, அந்தக் காணொளி சர்ச்சையின் தொடர்பில் அண்மையில் கைதான ஹாசிக் அஸிஸ் (Haziq Aziz) என்பவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திரு அஸ்மின் அலியுடன் அந்தக் காணொளியில் ஓரினப் பாலூறவில் ஈடுபட்டது தாமே என்று அந்த ஆடவர் கூறி வருகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்