Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலியல் காணொளி விவகாரத்தில் இணைத்துப் பேசப்படும் ஆடவர் நெருக்கமானவர் அல்லர்: மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர்

மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, பாலியல் காணொளி விவகாரத்தில் தம்மை இணைத்துப் பேசும் ஆடவர் தமக்கு நெருக்கமானவர் அல்லர் எனக் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பாலியல் காணொளி விவகாரத்தில் இணைத்துப் பேசப்படும் ஆடவர் நெருக்கமானவர் அல்லர்: மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர்

(படம்: Bernama)

மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, பாலியல் காணொளி விவகாரத்தில் தம்மை இணைத்துப் பேசும் ஆடவர் தமக்கு நெருக்கமானவர் அல்லர் எனக் கூறியிருக்கிறார்.

நாட்டின் பொருளியல் விவகாரங்களே தமது முதன்மையான அக்கறைக்குரிய அம்சங்கள் என்று அவர் சொன்னார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே தாம் அதிக கவனம் செலுத்திவருவதாகத் திரு. அஸ்மின் குறிப்பிட்டார்.

பாலியல் காணொளி விவகாரத்தில் தம்மை இணைத்துப் பேசும் திரு. Haziq, அடிக்கடி கட்சி மாறும் நபராக அறியப்படுபவர் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். கட்சி உறுப்பினரான அவரைத் தமக்கு அறிமுகம் உண்டு எனக் குறிப்பிட்ட திரு. அஸ்மின், கெ அடிலான் கட்சியிலிருந்து அந்த நபர் முதலில் தேசிய முன்னணிக்கு மாறியதாகச் சொன்னார்.

தேர்தலில், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வெற்றிபெற்றதும் அந்த நபர் மறுபடியும் கெ அடிலான் கட்சிக்கு மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட நடத்தை கொண்டவரே தம் மீது குற்றம் சுமத்தி வருகிறார் என்றார் திரு. அஸ்மின்.

முன்னதாக, சர்ச்சைக்குரிய அந்தக் காணொளிகள், அரசியல் நோக்கம் கொண்டவை எனப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருந்தார். அந்தக் காட்சிகள் பொய்யானவை எனத் தாம் கருதுவாக அவர் சொன்னார். அரசியல் களத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்