Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மருத்துவமனையில் மாற்றிக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை மீண்டும் மாற்ற விரும்பாத பெற்றோர்

2015இல், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிறந்த இரு குழந்தைகளைப் பற்றிய கதை இது.  

வாசிப்புநேரம் -

2015இல், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிறந்த இரு குழந்தைகளைப் பற்றிய கதை இது.

இரு குழந்தைகளும் மருத்துவமனையில் தவறான பெற்றோருக்கு மாற்றிக்கொடுக்கப்பட்டன.

குழந்தைகளின் தாயார்களில் ஒருவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

தனது மகனுக்கும் தனது குடும்பத்திலுள்ள யாருக்கும் முக ஒற்றுமை இல்லாததைக் கவனித்ததாக அவர் கூறினார்.

அவர் தனது கணவரிடம் இதைப் பற்றிக் கூற, இருவரும் மருத்துவமனையை அணுகினர்.

மருத்துவமனை தம்பதி கூறியதைப் பொருட்படுத்தவில்லை.

பிள்ளையின் தந்தை Right To Information அமைப்பின் மூலம் மருத்துவமனையிடமிருந்து தகவல்களைப் பெற்றார்.

பல முயற்சிகள், மரபணுச் சோதனைகளுக்குப் பிறகு இரு பிள்ளைகளின் பெற்றோரும் பிள்ளைகளை அவரவரது சொந்தப் பெற்றோரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர்.

ஜனவரி 4இல் பிள்ளைகள் அவரவர் சொந்தப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பிள்ளைகளுக்கு இதில் உடன்பாடு இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு வளர்த்த பெற்றோரிடமிருந்து பிரிய மறுத்து அழுதனர் பிள்ளைகள்.

பிள்ளைகளின் உணர்ச்சிகளைக் கண்டு மனமுருகிய பெற்றோர் பிள்ளைகளை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று தீர்மானம் செய்துள்ளனர்.

இம்மாதம் (ஜனவரி 24) மீண்டும் நீதிமன்றத்தில் அனைவரும் சந்திப்பர். ஆனால், இம்முறை பிள்ளைகளை ஒப்படைக்குமாறு கேட்கவேண்டாம் என்பது அவர்களது வேண்டுகோளாக இருக்கும்.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்