Images
  • cream

சீனா: கிரீம் பயன்படுத்தியதால், 5 மாதக் குழந்தைக்குப் பக்க விளைவுகள்

சீனாவில், குழந்தைகளுக்கான கிரீமைப் பயன்படுத்திய பின், 5 மாதக் குழந்தைக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மிதமிஞ்சிய சுரப்பிநீர் (hormones) கலந்து அந்த கிரீம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


கிரீமைப் பயன்படுத்திய பிறகு, குழந்தையின் எடை வேகமாக அதிகரித்தது, அதன் உடல் முழுவதும் முடி வளரத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் நடமாட்ட வளர்ச்சியும் மெதுவடைந்ததாகக் கூறப்படுகிறது.

2 மாதங்களாக அந்தக் குழந்தையின் உயரம் கூடவே இல்லை. ஆனால், மாதந்தோறும் 3 கிலோகிராம் எடை அதிகரித்திருக்கிறது. முகம் கெட்டிப்பட்டுப்போய்விட்டது என்று குழந்தையின் தாயார் குறிப்பிட்டார்.

அறிவியல் தொடர்பான பதிவுகளை இணையத்தில் பகிரும் Daddy Wei என்பவர், அது தொடர்பான காணொளியைத் தமது Weibo பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைக்குப் பூசப்பட்ட கிரீமில் ஒரு கிலோகிராமிற்கு சுமார் 30 மில்லிகிராம் clobetasol propionate என்ற சுரப்பிநீர் இருந்ததாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட சருமப் பிரச்சினைக்கான மருந்து தயாரிக்கும்போதே தவிர, குழந்தைகளின் சருமத்திற்கான கிரீம்களில் சுரப்பிநீர் இருக்கக்கூடாது என்று 8 World News சுட்டியது.

அதை அடுத்து, அந்த கிரீம் கடைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Top