Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாதிப் பயணத்திலேயே விமான நிலையத்திற்குத் திரும்பிய விமானம் - என்ன காரணம்?

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
பாதிப் பயணத்திலேயே விமான நிலையத்திற்குத் திரும்பிய விமானம் - என்ன காரணம்?

(படம்: REUTERS)

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்குக் காரணம், விமானத்தில் பயணம் செய்த தாய் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தம் குழந்தையை விட்டுவிட்டார்.

Saudi Arabia Airlines விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, ஜித்தா நகரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்றதாக அந்தத் தாய் விமானச் சிப்பந்திகளிடம் தெரிவித்தார்.

இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர் உடனடியாக விமான நிலையத்திற்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தார்.

சிறப்பு அனுமதி கேட்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியோடு விமானி தொடர்புகொண்டார்.

குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற தாய் தொடர்ந்து பயணம் செய்ய மறுத்ததாகவும் விமானி அதிகாரியிடம் பகிர்ந்துகொண்டார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல், காணொளியாகப் பதிவாகி இணையத்தை வலம் வருகிறது.

விமான நிலையத்தில் அந்தப் பெண் எப்படி தம் குழந்தையை விட்டுச் சென்றிருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்