Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலி தீவுக்கான COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்தோனேசிய அரசாங்கம்

பாலி தீவுக்கான COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்தோனேசிய அரசாங்கம்

வாசிப்புநேரம் -

இந்தோனேசிய அரசாங்கம் பாலி தீவுக்கான COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இருப்பினும், அங்கு செல்ல விரும்பும் அனைத்துலகப் பயணிகள் மேலும் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த ஏற்பாடு.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதை, அதிகாரத்துவச் செயலி மூலம் உறுதி செய்தால்,சுற்றுப்பயணிகள் பாலி தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கு சென்றதும், அவர்கள் 8 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பெரும்பாலான பகுதிகளில் COVID-19 நிலவரம் மேம்படுவதால் எல்லைகளைத் திறப்பது சாத்தியமாவதாக இந்தோனேசியக் கடல்துறை, முதலீட்டு அமைச்சர் கூறினார்.

ஆசியாவில் கிருமிப்பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.

அங்கு 4 மில்லியன் பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 138ஆயிரம் பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்