Images
  • garuda
    (File photo: AFP)

பாலி-ஷாங்ஹாய் பயணிக்கு COVID-19; விமானத்தைச் சேவையிலிருந்து நீக்கிய கருடா விமான நிறுவனம்

கருடா விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 28ஆம் தேதி, பாலியிலிருந்து (Bali) ஷாங்ஹாய் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு COVID-19 இருந்தது இந்த மாதம் 5ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது.

அதனையடுத்து, இந்தோனேசியாவின் தேசிய விமான நிறுவனமான கருடா, அதன் GA 858 விமானத்தைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கியுள்ளது.

விமானத்தைச் சுத்தப்படுத்தி, கிருமிப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக நிறுவனம் தெரிவித்தது.

காற்றை வடிகட்டித் தூய்மைப்படுத்தும் விமானத்தின் இயந்திரத்தை மாற்றியிருப்பதாகவும் அது சொன்னது.

இந்தோனேசியா சீனா இடையே சேவையாற்றும் தனது அனைத்து விமானங்களையும் கிருமிநாசினித் திரவங்களைக் கொண்டு சுத்தம் செய்திருப்பதாக அது தெரிவித்தது.

விமானச் சிப்பந்திகள் அனைவரும் விமானப் பயணத்துக்கும் முன்னும், பின்னும், சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் சொல்லப்பட்டது.

 

Top