Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலித் தீவுக்குச் செல்லும் பயணிகள் இனி பத்து டாலர் வரி செலுத்த வேண்டும்

இந்தோனேசியாவில் பாலித் தீவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இனி பத்து டாலர் வரி செலுத்த வேண்டியிருக்கும். 

வாசிப்புநேரம் -
பாலித் தீவுக்குச் செல்லும் பயணிகள் இனி பத்து டாலர் வரி செலுத்த வேண்டும்

படம்: Pixabay

இந்தோனேசியாவில் பாலித் தீவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இனி பத்து டாலர் வரி செலுத்த வேண்டியிருக்கும். 

தீவின் சுற்றுச்சூழலையும் கலாசாரத்தையும் பாதுகாக்க அந்த வரிப் பணம் உதவும் என்று கூறப்பட்டது. 

விமானச் சீட்டில் வரித் தொகையும் சேர்த்துக் கொள்ளப்படும் அல்லது, விமான நிலையத்தில் வரி வசூலிப்பதற்காகத் தனி முகப்பு அமைக்கப்படும் என்று பாலித் தீவுகளின் ஆளுநர் கூறியதாக The Jakarta Post நாளேடு தெரிவித்தது. 

புதிய வரி எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

 பாலியில் நாள்தோறும் நாலாயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன.

அவற்றில் 60 விழுக்காடு மட்டுமே குப்பை நிரப்பும் இடங்களைச் சென்று சேர்கின்றன.

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், உறிஞ்சு குழல்கள் ஆகியவற்றுக்குச் சென்ற ஆண்டு அதிகாரிகள் தடை விதித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்