Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர் புதிய நகர நடுவத்தின் முழு உரிமை..மலேசிய அரசாங்கத்துக்கே

பண்டார் மலேசியா திட்டத்துக்கான முழு உரிமையையும் மலேசிய அரசாங்கமே வைத்துக் கொள்ளும் என்று பிரதமர் திரு. நஜிப் ரசாக் அறிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர் புதிய நகர நடுவத்தின் முழு உரிமை..மலேசிய அரசாங்கத்துக்கே

(பண்டார் மலேசியா: வரைகலைப்படம்)

பண்டார் மலேசியா திட்டத்துக்கான முழு உரிமையையும் மலேசிய அரசாங்கமே வைத்துக் கொள்ளும் என்று பிரதமர் திரு. நஜிப் ரசாக் அறிவித்துள்ளார்.

அலுவலகங்கள், குடியிருப்புத் தொகுதிகள் ஆகியவற்றைக் கொண்டது பண்டார் மலேசியா.

பண்டார் மலேசியா கோலாலம்பூரின் புதிய நகர நடுவமாகத் திகழவிருக்கிறது.

சிங்கப்பூர் - மலேசியா இடையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அதிவேக ரயில் திட்டம், தற்போதுள்ள ரயில் கட்டமைப்புகள், கோலாலம்பூரின் முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றுடன் புதிய நகர நடுவம் இணைக்கப்படும்.

எனவே அதன் முழு உரிமையையும் அரசாங்கமே வைத்திருப்பது முக்கியம் என்று திரு. நஜிப் கூறினார்.

திட்டத்துக்கான நிதியை வழங்க, மலேசியா, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மாறாக, திட்டத்தை மேற்பார்வையிட ஒரு பெருநிறுவனத்தை நியமிக்க மலேசியா விரும்புகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்