Images
  • bk
    படம்: REUTERS/Soe Zeya Tun

பேங்காங்கில் விரைவுபடுத்தப்படும் தடுப்பூசிப் பணிகள்

தாய்லந்துத் தலைநகர் பேங்காங்கில் (Bangkok) உள்ள குலோங் தோய் (Khlong Toei) சேரிப் பகுதியில் தடுப்பூசித் திட்டம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெரிசல்மிக்க பகுதிகளில் மக்கள் கூட்டமாக வசிப்பதால், அங்கு பெருமளவு கிருமி பரவலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

சிறிய குடியிருப்பு வட்டாரத்தில் சுமார் 75ஆயிரம் வீடுகள் உள்ளன.

அங்கு வசிப்போர் பேங்காங்கிற்கும் அருகிலுள்ள மாநிலங்களுக்குத் தினந்தோறும் பயணம் செய்கின்றனர்.

அந்த சமூகத்தில் வசிப்போருக்குத் தடுப்பூசி போடுவது அவசரத் தேவை என்று தாய்லந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சா (Prayut Chan-o-cha) கூறினார்.

தாய்லந்து நேரப்படி, பிற்பகல் 1 மணிக்குத் தடுப்பூசித் திட்டம் தொடங்கவிருக்கிறது.

இன்று சுமார் 1,000 பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நாள்களில் சுமார் ஈராயிரத்திலிருந்து 3,000 பேர் வரை தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.  

Top