Images
  • bkk
    படம்: REUTERS/Jorge Silva

பேங்காக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் (Bangkok) ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் நெருக்கடிநேர-ஆணையைப் பிறப்பித்துள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவசர நடவடிக்கை அவசியம் என்று தாய்லந்து அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.

புதிய விதிகளின் கீழ், 5 பேருக்கு மேல் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொய்ச் செய்தி பரப்புவதற்கு எதிரான தடையும், போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவைப் (Prayuth Chan-o-cha) பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

தாய்லந்தில் புதிய அரசமைப்புச் சட்டம் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மன்னராட்சி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

Top