Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேங்காக்கில் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டம்

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நான்காவது நாளாகப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நான்காவது நாளாகப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடையையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு நகர்ப்பகுதியில் முக்கிய ரயில் நிலையங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிராயுத் சான் ஓ சாவின் (Prayut Chan-o-cha) அரசாங்கத்தைக் கவிழ்ப்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம்.

நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பலர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று மதியம் மூன்று மணிக்கு அனைத்து பெருவிரைவு ரயில் நிலையங்களிலும் திரளுமாறு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்