Images
  • Snake
    ( படம்:  AFP )

பேங்காக் குடியிருப்புகளை அச்சுறுத்தும் பாம்புகள்

பேங்காக் குடியிருப்புகளில் கடந்த மூன்று மாதங்களாக பாம்பு தொடர்பாக அவசர உதவி எண்ணிற்குப் பல அழைப்புகள் வந்திருப்பதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூங்காக்கள், பள்ளிகள், நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களில் பாம்பு அதிகளவில் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வீடுகளில் எலி இருந்தால் அங்கு பாம்புகள் இருப்பதாகவும், மழைக்காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.

நச்சுப் பாம்புகளை பிடிபட்டால் அவற்றைப் பாம்புப் பண்ணைகளுக்கு கொண்டுசெல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாம்புகளை எவ்வாறு கையாள்வது என்பதுபற்றிப் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பேங்காக்கில் 2016ஆம் ஆண்டு பாம்புக் கடியால் 1700 பேர் பாதிக்கப்பட்டதாக தாய்லந்துச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

Top