Images
  • crime (2)
    கோப்புப் படம்: BRENDAN SMIALOWSKI / AFP

தாய்லந்து: முகமூடித் திருடனைத் தேடும் பணி தீவிரம்

தாய்லந்தில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடன் ஒருவனைத் தேடும் பணியை அந்நாட்டுக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

மத்தியப் பகுதியில் உள்ள தங்கக் கடை ஒன்றில் அந்தச் சம்பவம்.

கடைக்குள் புகுந்து திருடிய அந்தத் திருடன், அங்கிருந்த மூவரைக் கொன்றதாகவும் தெரிய வருகிறது.

அந்த நபரைக் கைது செய்வதற்கு உதவியான தகவல்களை அளிப்போருக்கு 20,000 டாலர் வரையிலான வெகுமதி அளிக்கப்படும் என்று தாய்லந்து காவல்துறை அறிவித்துள்ளது.

அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் மாண்டோர் பற்றிய விவரங்களையும் காவல்துறை ஆராய்ந்து வருகின்றது.

அந்தத் திருடனின் செயலுக்குப் பின்னணியில், திருட்டு மட்டும் நோக்கமாக இருக்காது என்பது காவல்துறையின் கணிப்பு.   ஏனெனில், அந்த ஒற்றைத் திருடன், அந்தக் கடையிலிருந்து திருடிய தங்கத்தின் மதிப்பு மிக மிகக் குறைவானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Top