Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷில் மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமான பேருந்து விபத்தின் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை

பங்களாதேஷில், இளம் மாணவர்கள் இருவர் பேருந்து விபத்தில் கொல்லப்படக் காரணமான போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
பங்களாதேஷில் மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமான பேருந்து விபத்தின் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை

படம்: AFP

பங்களாதேஷில், இளம் மாணவர்கள் இருவர் பேருந்து விபத்தில் கொல்லப்படக் காரணமான போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர், பேருந்து ஓட்டுநர்கள்.

மூவர் மீதும் சுமத்தப்பட்ட நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேருந்து நிறுவனத்தின் முதலாளியும் அவரது உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் வேகமாகச் சென்ற பேருந்து மோதி, பள்ளிப் பிள்ளைகள் இருவர் கொல்லப்பட்டனர்.

கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் நோக்கில், பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை மிதமிஞ்சிய வேகத்தில் செலுத்தி அதன் கட்டுப்பாட்டை இழந்து பிள்ளைகள் மேல் மோதியதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரிப் பல்லாயிரம் பேர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்ப்பாட்டங்களின்போது 150க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

சென்ற ஆண்டு மட்டும் பங்களாதேஷில் சாலை விபத்துகளால் சுமார் 7,500 பேர் மாண்டனர்.

அது நாளொன்றுக்கு 20 என்ற விகிதத்தைக் காட்டிலும் அதிகம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்