Images
  • Bangla
    படம்: AFP

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் உணவகம் ஒன்றில் 2016ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய 7 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பயங்கரவாதிகள் நடத்திய அந்தத் தாக்குதலில் 22 பேர் மாண்டனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

தண்டனைக்குள்ளான பயங்கரவாதிகள் மீது அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அரசாங்க வழக்குரைஞர் கூறினார்.

தாக்குதல் சம்பவம் 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி நடந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட வட்டாரம் வெளிநாட்டு அரசதந்திரிகள் அதிகம் வாழும் இடம்.


 

Top