Images
  • bangladesh ferry disaster
    (கோப்புப் படம்: REUTERS)

பங்களாதேஷ்: படகு விபத்தில் குறைந்தது 34 பேர் மரணம்

பங்களாதேஷில், சென்ற வார இறுதியில் நேர்ந்த படகு விபத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 34க்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் Narayanganj நகரிலிருந்து சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்ட படகு, பெரிய சரக்குக் கப்பலுடன் மோதியது.

கடுமையாக மாசடைந்த Shitalakshya ஆற்றிலிருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளை அதிகாரிகள் நிறுத்தினர்.


ஆனால் காணாமல்போனோரின் உறவினர்கள் நெருக்கியதை அடுத்து, நேற்று ஹெலிகாப்டர் மூலம் தேடி-மீடகும் பணி மீண்டும் தொடங்கியது.

உறவினர்களின் கூற்றுப்படி, இன்னும் இருவரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரி Mustain Billah AFP செய்தியிடம் கூறினார்.

- AFP
 

Top