Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷ் தீச்சம்பவம் : 15,000 வீடுகள் சேதம்; 50,000 பேர் பாதிப்பு

தீயணைப்பாளர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ் தீச்சம்பவம் : 15,000 வீடுகள் சேதம்; 50,000 பேர் பாதிப்பு

(படம்: Reuters)

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கடும் தீச்சம்பவத்தில் சுமார் 15,000 வீடுகள் சேதமடைந்தன.
50,000 பேர் அதனால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சலந்திக்கா (Chalantika)பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (16 ஆகஸ்ட்) தீச்சம்பவம் ஏற்பட்டது.

தீயணைப்பாளர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

(படம்: Reuters)

சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அங்கு குடியிருப்போரில் பெரும்பாலோர் குறைந்த சம்பளம் ஈட்டுவோர். தீச்சம்பவம் ஏற்பட்டபோது ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்துகொள்ள பலர் சென்றிருந்தனர்.

தங்க இடமில்லாமல் தவிப்போருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்