Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெங்களூர் நகரில் Facebook பதிவு தொடர்பில் கலவரம்: மூவர் மரணம்

இந்தியாவின் பெங்களூர் நகரில் Facebook பதிவு ஒன்றின் தொடர்பில் மூண்ட கலவரத்தில் மூவர் உயிரிழந்தனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் பெங்களூர் நகரில் Facebook பதிவு ஒன்றின் தொடர்பில் மூண்ட கலவரத்தில் மூவர் உயிரிழந்தனர்.

நபிகள் நாயகத்தைப் பற்றி அரசியல்வாதி ஒருவரின் உறவினர் இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அதனையடுத்து அரசியல்வாதியின் வீட்டுக்கு வெளியில் கூட்டம் கூடியது.

அங்கிருந்த வாகனங்களுக்குத் தீ மூட்டப்பட்டது. தடுக்க வந்த காவல் அதிகாரிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.

கூட்டத்தைக் கலைக்க காவல் அதிகாரிகள் தோட்டாக்களையும், கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அதிகாரிகள் தடியடியும் நடத்தினர்.

Facebook பதிவை வெளியிட்டதாக நம்பப்படும் அரசியல்வாதியின் உறவினரும், மேலும் 110 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடந்த கலவரத்தில் குறைந்தது 60 காவல் அதிகாரிகள் காயமடைந்ததாக நகரக் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக காவல்துறை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியான அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தி காணொளி மூலம் அமைதி காக்க அழைப்பு விடுத்திருக்கிறார். 

சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்ட ஒருவரால் சகோதரத்துவமிக்க நாம் சண்டையிடக்கூடாது. எது நடந்தாலும் நாம் சகோதரர்கள். தவறு செய்தவருக்குச் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்.

என்று அவர் காணொளிப் பதிவில் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்