Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பங்களாதேஷ்: பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் குணமடைந்து வருகின்றனர்

ஒட்டிப் பிறந்த பங்களாதேஷிய சகோதரிகள் கடந்த வாரம் அறுவை சிகிச்சையால் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் குணமடைந்து வருவதாக மருத்துவக் குழு தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ்: பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் குணமடைந்து வருகின்றனர்

(படங்கள்: AFP/Handout)

டாக்கா: ஒட்டிப் பிறந்த பங்களாதேஷிய சகோதரிகள் கடந்த வாரம் அறுவை சிகிச்சையால் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் குணமடைந்து வருவதாக மருத்துவக் குழு தெரிவித்தது.

3 வயது ரபியா, ருகாயா ஆகிய இருவரும் தலையின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். கருவில் எற்படும் குறைபாடு காரணமாக, சுமார் 6 மில்லியன் பிரசவங்களில் ஒன்று, ஒட்டிப் பிறந்ததாக இருக்கும்.

பங்களாதேஷைச் சேர்ந்த 100 மருத்துவர்களுடன் ஹங்கேரியைச் சேர்ந்த 35 மருத்துவர்கள், 39 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், சிறுமிகளைப் பிரித்தனர்.

கடந்த ஆண்டிலிருந்து, சிறுமிகள் இருவரும் அறுவை சிகிச்சைகளுக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், சிறுமிகள் முழுமையாகக் குணமடையும் முன், பல சவால்களை எதிர்நோக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதுவரை, சிறுமிகளுக்கு 46 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதி சிகிச்சைக்கு முன், சிறுமிகள் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 50 விழுக்காடு என்று மருத்துவர்கள் கூறினர்.

இதுவரை, தலையில் ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் பிரிக்கும் சிகிச்சைகளில் ஒரு சில மட்டுமே வெற்றிகரமாக முடிந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்