Images
இந்தோனேசியாவில் கடைவீடு ஒன்றில் நெரிசலாகத் தங்கியிருந்த 200 பங்களாதேஷ் நாட்டினர்
மேடான்: இந்தோனேசியாவில் ஒரு கடைவீட்டில் பங்களாதேஷைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 பேர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமத்ராவிலிருக்கும் மேடான் (Medan) நகரிலுள்ள ஓர் இரண்டு மாடி வீட்டில் நெரிசல் மிகுந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20இலிருந்து 30 வயதிற்கு இடைப்பட்ட அந்த இளையர்கள்
தங்களுக்குப் போதுமான உணவு இல்லை என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர்.
அவர்கள் அண்டை நாடான மலேசியாவுக்கு வேலை தேடிச்சென்று அங்கிருந்து இந்தோனேசியாவை அடைந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
கடைவீட்டின் உரிமையாளர் யார், அந்த நபருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற விவரம் தெரியவில்லை.
இந்தோனேசியாவில் அடைக்கலம் நாடிச் செல்வோர் அங்கு வேலை செய்ய அனுமதியில்லை.

