Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் தடையைப் பொருட்படுத்தாமல், போராடத் தயாராகும் மக்கள்

தாய்லந்தில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை இன்று மீண்டும் நடத்தவிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை இன்று மீண்டும் நடத்தவிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.

தலைநகர் பேங்காக்கின் முக்கிய வர்த்தக வட்டாரத்தில் கூடவிருப்பதாகத் அவர்கள் தெரிவித்தனர்.

பெரிய அளவிலான ஒன்றுகூடலைத் தடைசெய்ய, அரசாங்கம் நெருக்கடி கால உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை வழிநடத்திய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லந்தின் மன்னராட்சி முறையில் சீர்திருத்தம் தேவை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவைப் (Prayuth Chan-o-cha) பதவி விலகச் செய்வதிலும் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்