Images
  • Bangkok\

பேங்காக் மத்திய வட்டாரத்தில் துப்பாக்கிச் சூடு

பேங்காக் மத்திய வட்டாரத்தில் வர்த்தகக் கட்டடங்களுக்கு வெளியே ஆடவர் ஒருவர் 10க்கும் மேற்பட்டமுறை துப்பாக்கியால் சுட்டு பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

பத்தும்வான் (Pathumwan) வட்டாரத்தில் துப்பாகிச்சூடு நடந்தது.

சம்பவம் தொடர்பாக 44 வயது ஆடவர் எக்கச்சாய் ஜருக்சில்பா ( Ekkachai Jareuksilpa) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

காவல்துறைக்கும் துப்பாக்கிக்காரருக்கும் இடையில் நீடித்த சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

துப்பாகிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

தாய்லந்தில் சில நாள்களுக்கு முன்பு நக்கோன் ராட்சசிமா நகரில் (Nakhon Ratchasima) நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 29 பேர் மாண்டனர்.
 

Top