Images
  • najib (1)
    (படம்: AFP/MOHD RASFAN)

அரசியல் ஆதாயத்திற்காகத் தேசிய முன்னணி இராணுவத் தளங்களை இடம் மாற்றியதாகக் குற்றச்சாட்டு

மலேசியாவில், அரசியல் ஆதாயத்திற்காக முன்னாள் தேசிய முன்னணி நிர்வாகம் 4 இராணுவத் தளங்களை இடமாற்றம் செய்துள்ளதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராணுவ வாக்காளர்களை இடம் மாற்ற அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் முகமது சாபூவை ( Mohamad Sabu) மேற்கோள்காட்டி The Star நாளேடு தெரிவித்தது.

இராணுவப்படையின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் தற்காப்பு அமைச்சு புதிய தளங்களை உருவாக்கியது என்று அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த அது வித்திட்டது என்றார் அவர்.

இடமாற்றச் செயலால், தமது அமைச்சுக்கு அரை பில்லியன் ரிங்கிட்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த விவகாரம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் காவல்துறையிடமும் மற்ற அரசாங்க அமைப்புகளிடமும் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கூறினார். 

Top