Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரோனா கிருமிப்பரவல் அச்சத்துக்கு இடையிலும், இந்தோனேசியாவில் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் வௌவால் கறி

இந்தோனேசியாவின் சில பகுதிகளில் வௌவால் கறி இன்னமும் பலரால் உண்ணப்படுகிறது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் சில பகுதிகளில் வௌவால் கறி இன்னமும் பலரால் உண்ணப்படுகிறது.

கொரோனா கிருமித்தொற்று வௌவால்களில் தோன்றிப் பின் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

வடக்கு சுலவேசியில் வௌவால் கறியைக் கொண்டு Paniki எனும் உணவு சமைக்கப்படுகிறது. அதை மினஹசான் என்று அழைக்கப்படும் மக்கள் உண்கின்றனர்.

புதிய அச்சத்தால், வியாபாரம் துளியும் பாதிக்கப்படவில்லை என்கின்றனர் அந்தப் பகுதியில் வௌவால் கறி விற்கும் சிலர். எப்போதும் போல் கறி விறுவிறுவென்று விற்றுத் தீர்ந்துவிடுகிறதாம்.

நாளொன்றுக்கு சராசரியாக 50 இலிருந்து 60 வௌவால்கள் விற்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் 600 வௌவால்கள் வரை விற்கப்படுமாம்.

கொரோனா கிருமித்தொற்று இதுவரை இந்தோனேசியாவில் எவரையும் பாதிக்கவில்லை. இருப்பினும், தலைநகர் ஜக்கர்த்தாவில் உள்ள சில பிரபல உணவகங்கள் வௌவால் கறி வழங்குவதை நிறுத்தியுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்