Images
  • Batam Bintan
    (படம்: Reuters/Henning Gloystein/Files)

பாத்தாம், பிந்தான் தீவுகளை இணைக்க 7 கிலோமீட்டர் பாலம் கட்ட இந்தோனேசியா திட்டம்

பாத்தாம், பிந்தான் தீவுகளை இணைக்கும் வகையில் இந்தோனேசியா 7 கிலோமீட்டர் நீளப் பாலத்தைக் கட்டவிருக்கிறது.

அந்தப் பகுதிகளில் சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஓர் அங்கம் அது என்று இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்தது.

பாலத்தைக் கட்ட 280 மில்லியன் டாலருக்கு மேல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய விரிவாக்கத்தின் மூலம் பயனடையும் வகையில் அந்தப் பாலம் அமையும் என்று இந்தோனேசியா தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும். பணிகள் நிறைவடைய சுமார் நான்காண்டுகள் ஆகும்.

 

Top