Images
பாத்தாம் மரப் பாலத்தில் அளவிற்கு அதிகமானோர் நின்றதால் பாலம் சரிந்தது
இந்தோனேசியாவின் பாத்தாமிலுள்ள Montigo Resort உல்லாசத் தலத்தில் மரப் பாலத்தில் அளவிற்கு அதிகமானோர் ஒரே இடத்தில் நின்றதால் பாலம் சரிந்து விழுந்ததாக Montigo Resort தெரிவித்தது. அந்தச் சம்பவத்தில் 26 சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்.
அவ்வப்போது சிலர் கடந்து செல்வதற்காகக் கட்டப்பட்ட பாலம் அது. ஆனால், பாலம் சரிந்தபோது 30 பேர் குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று கொண்டிருந்ததாக அந்த உல்லாசத் தலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பாலத்தின் தூண்களும் அடித்தளமும் உறுதியாய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும் அந்தப் பாலத்தில் எத்தனை பேர்வரை நிற்க முடியும் என்பது, உல்லாசத் தலம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.