Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: பெய்ச்சிங்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தகவல்

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் COVID-19 நோய்ப்பரவல்   கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
COVID-19: பெய்ச்சிங்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தகவல்

(படம்: AFP/GREG BAKER)

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் COVID-19 நோய்ப்பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் சமூக அளவிலான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தொடரக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

அண்மையில் பெய்ச்சிங்கில் மீண்டும் கொரோனா கிருமிப்பரவல் ஏற்பட்டது.

ஜூன் 11 ஆம் தேதி Xinfadi மொத்த விற்பனைச் சந்தையின் மூலம் பரவிய நோய்த்தொற்றால் நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டன.

அதன்பிறகு 256 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 253 பேர் Xinfadi சந்தையுடன் தொடர்புபடுத்தப்பட்டனர்.

பாதிக்கப்படவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காணும் பணி வேகமாக நடந்து வருகிறது.

தற்போது பெய்ச்சிங்கில் அன்றாடம் 300,000 பேருக்கு COVID-19 நோய்த்தொற்றுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 3 மில்லியன் பேர் அங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்