Images
  • china covid
    (படம்: Meituan Dianping/ Handout via REUTERS)

பெய்ச்சிங்: கிருமித்தொற்று அதிகரித்ததால் விரைவுபடுத்தப்படவுள்ள சோதனைகள்

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் திடீரெனக் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால், சோதனைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அதனைத் தெரிவித்தார்.

அண்மையில், Xinfadi மொத்த விற்பனைச் சந்தை, கிருமி தொற்றும் இடமாக அடையாளம் காணப்பட்டது. அங்கு, சுமார் 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நகரில் பரிசோதனைகள் அங்கே அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது : நாளொன்றுக்கு 300,000 சோதனைகளை மேற்கொள்ளலாம்.

மார்ச் மாதத்தில்: 40,000 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளமுடிந்தது.

இம்மாதம் 12-ஆம் தேதிக்கும் 22-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், 2.95 மில்லியன் பேரிடம் உடல் திரவ மாதிரி சேகரிக்கப்பட்டதாக, பெய்ச்சிங் நகராட்சி தெரிவித்தது.

பெய்ச்சிங்கில் 20 மில்லியன் பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட மாட்டாது என்று அதிகாரிகள் கூறினர்.

கிருமி தொற்றும் ஆபத்து அதிகமுள்ளவர்கள் மட்டுமே சோதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.   

Top