Images
  • beluga whale lipstick (1)
    (படம்: South China Morning Post)

திமிங்கிலத்தின் மீது உதட்டுச் சாயம் பூசிய பயிற்றுவிப்பாளர்...பின்னர் என்ன நடந்தது?

சீனாவில் கடல் வாழ் உயிரினப் பூங்காவில் இருக்கும் திமிங்கிலம் ஒன்றின் மீது உதட்டுச் சாயம் பூசியதற்காக திமிங்கிலப் பயிற்றுவிப்பாளர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

டாலியான் எனும் நகரத்தில் உள்ள Sun Asia Ocean World கடல் வாழ் உயிரினப் பூங்காவில் நடந்தது இந்தச் சம்பவம்.

அதில் பணியாற்றும் பயிற்றுவிப்பாளர், திமிங்கிலத்தின் வாயில் சிவப்பு நிற சாயத்தைச் சிரித்துக்கொண்டே பூசிக்கொண்டிருக்கும் காணொளி இணையத்தில் பதிவானது.

பயிற்றுவிப்பாளரின் செயலுக்கு விலங்குப் பிரியர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, விலங்குத் தோட்டமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. பயிற்றுவிப்பாளரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

காணொளி கடந்தாண்டு எடுக்கப்பட்டது. ஆனால், அது இணையத்தில் 100,000 முறை காணப்பட்டு கடந்த வாரம் இணையத்திலிருந்து அகற்றப்பட்டது.

நிர்வாகத்தை மேம்படுத்தி விலங்குப் பாதுகாப்புக் குறித்து ஊழியர்களுக்கு மேலும் பயிற்சி வழங்கவுள்ளதாக விலங்குத் தோட்டம் உறுதியளித்தது.

Top