Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெர்சாத்து கட்சியைத் தற்காலிகமாகக் கலைப்பதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி

மலேசியாவில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது வழிநடத்தும் எதிர்க்கட்சியான பெர்சாத்துவைத் தற்காலிகமாகக் கலைப்பதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, அந்தக் கட்சியை, நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பெர்சாத்து கட்சியைத் தற்காலிகமாகக் கலைப்பதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி

(படம்: REUTERS/Lai Seng Sin)

மலேசியாவில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது வழிநடத்தும் எதிர்க்கட்சியான பெர்சாத்துவைத் தற்காலிகமாகக் கலைப்பதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, அந்தக் கட்சியை, நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அதன்படி, நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் வரையில், பெர்சாத்து கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே கருதப்படும்.

மலேசிய நாடாளுமன்றம் இம்மாதம் 7ஆம் தேதி கலைக்கப்பட்டதற்கு 2 நாட்கள் முன்னதாக, பெர்சாத்து கட்சிளைக் கலைப்பதற்கு சங்கப் பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டது.

பெர்சாத்து கட்சி, அதன் பதிவிற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் பேரில், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, பெர்சாத்து கட்சிக்கு 30 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தச் சமயத்தில், பெர்சாத்து கட்சி எந்தவித நடவடிக்கைகளிலும் பங்கெடுக்கவோ, அதன் சின்னத்தைப் பயன்படுத்தவோ கூடாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்