Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பூட்டானில் கிருமிப்பரவல் காரணமாக முதன்முறையாக முடக்க நிலை அறிவிப்பு

பூட்டானில் கிருமிப்பரவல் காரணமாக முதன்முறையாக முடக்க நிலை அறிவிப்பு

வாசிப்புநேரம் -

பூட்டானில் முதன்முறையாக கிருமிப்பரவல் காரணமாக முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய குடியிருப்பாளர் ஒருவருக்கு, தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.

அதன் பின்னரே, பூட்டானில் முடக்கம் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் தலைநகர் திம்பூவிலுள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது.

பூட்டானில் இதுவரை 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் கிருமித்தொற்றால் பலியாகவில்லை.

மார்ச் மாதத்தில், அமெரிக்காவிலிருந்து வந்திருந்த சுற்றுப்பயணி ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக உறுதியான பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

பணக்கார சுற்றுப்பயணிகளை அதிகம் சார்ந்திருக்கும் பூட்டானில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவோருக்கு, மூன்று வாரக் கட்டாயத் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்