Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

9 நாள்களில் 60 விழுக்காட்டு மக்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள பூட்டான்

பூட்டான், 9 நாள்களுக்குள், தனது மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

பூட்டான், 9 நாள்களுக்குள், தனது மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
770,000 பேரில் 470,000 பேருக்கு முதல் AstraZeneca-Oxford தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அது AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

60 விழுக்காட்டை அடைவதில் முன்னணி வகித்த சேஷெல்ஸ் (Seychelles), இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற மற்ற நாடுகளை விட, பூட்டான் மிக விரைவாக அந்த இலக்கை எட்டியுள்ளது என்று AFP பகுப்பாய்வு கூறுகிறது.

சென்ற மாதம் 27ஆம் தேதி பூட்டானில் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது.

70 வயதிற்கு மேற்பட்டோர், உடற்குறையுள்ளோர் ஆகியோருக்கும் தடுப்பூசி போடுவதில் இப்போது கவனம் செலுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்