Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பசி, விரக்தி..வெள்ளத்தால் வாடும் இந்தியாவின் பீஹார் மக்கள்

இடுப்பளவுக்குப் பழுப்பு நிறத் தண்ணீர் ..கையில் துணி மூட்டை, தலையில் சட்டி சாமான்...

வாசிப்புநேரம் -
பசி, விரக்தி..வெள்ளத்தால் வாடும் இந்தியாவின் பீஹார் மக்கள்

(படம்: AFP)

இடுப்பளவுக்குப் பழுப்பு நிறத் தண்ணீர் ..கையில் துணி மூட்டை, தலையில் சட்டி சாமான்...

இப்படி இடம்விட்டு இடம்சென்று திண்டாடிக் கொண்டிருக்கின்றனர், இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் பீஹார்வாசிகள்.

பசியும் பட்டினியும் பழக்கமாகிவிட்டதாகப் பரிதாபமாகக் கூறுகின்றனர்.

(படம்: AFP)

"நாங்கள் மூழ்கிச் சாகும் நிலை வந்தால் மட்டுமே அரசாங்க அதிகாரிகள் எங்களைக் கண்டுகொள்வார்கள்; இல்லையென்றால் எங்களை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை." என்று AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய சிலர் புலம்பினர்.

பலரது வீடுகளில் கூரையளவு தண்ணீர். இதனால் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலை ஓரங்களில் சமைத்துச் சாப்பிடும் நிலை.

பொதுவாக மழைக் காலத்தில் மோசமாகப் பாதிக்கப்படும் மாநிலம் பீஹார்.

ஆனால் இந்த ஆண்டு மழை ஈவு இரக்கமின்றி பெய்துதள்ளிவிட்டதாக மனம் வெம்புகின்றனர் பீஹார் மக்கள்.

(படம்: AFP)

பீஹாரில் மட்டும் வெள்ளத்துக்கு இதுவரை 67 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 4.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்