Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: பீஹாரில் தேர்தல்; வாக்களிக்க வரிசையில் நிற்கும் மில்லியன் கணக்கானோர்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் நடைபெறும் உலகின் ஆகப் பெரிய வாக்களிப்பு அது.

சுமார் 70 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதிகமான கூட்டத்தைத் தவிர்க்க, வாக்களிப்பு 3 நாள்களுக்கு நடைபெறும்.

எனினும், அரசாங்க ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல், பலரும் முகக்கவசம் அணியாமல், பாதுகாப்பு இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் வாக்களித்தனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, தான் வெற்றி பெற்றால் மாநிலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இலவசத் தடுப்பு மருந்து வழங்க உறுதியளித்தது.

திரு. மோடியின் அரசாங்கம் விதித்த கடுமையான ஊரடங்கின்போது வேலைகளை இழந்தோரில் பலரும் பீஹாரைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான பீஹாரை 10 ஆண்டுக்கும் மேலாக பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

ஆனால், பீஹாரின் வளர்ச்சிக்குப் போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற குறைகூறல்கள் ஆளும் கூட்டணிக்கு எதிராக இம்முறை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்