Images
  • cash for kida
    (படம்: AFP/JUNG Yeon-Je)

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரியாவில் புதிய முயற்சி

தென் கொரியாவில் தற்போது பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

அந்நாட்டுப் பெண்கள் கருவுறும் விகிதமும் மிகக் குறைவாக உள்ளதால் இந்தக் காலாண்டில் தென் கொரியப் பெண் ஒருவரால் வாழ்நாளில் ஒரு குழந்தைதான் பெறமுடியும் என்று பதிவாகியுள்ளது.

அந்த இலக்கு இரண்டாக இருந்தது.

இந்த நிலை தொடர்ந்தால் 2028 ஆம் ஆண்டு தென் கொரியா அதிக அளவில் பாதிக்கப்படும்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசாங்கம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

8 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மாருக்கு அலுவலக வேலை நேரத்தை தினமும் ஒரு மணி நேரம் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வேலை பார்க்கும் பெண்கள் நீண்டநேரம் வேலை செய்வதைக் குறைக்கவும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் குழந்தை பெறும் தந்தையருக்கான விடுப்பு 3 நாளில் இருந்து 10 நாளாக அதிகரிக்கும்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 121 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது தென் கொரியா. 

Top