Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தூய்மைக்கேட்டு நிலவரத்தால் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தாய்லந்தின் அரசங்கம்

பேங்காக்கின் காற்றுத் தூய்மைக்கேட்டு நிலவரத்தால் பதற்றமடைய வேண்டாம் என்று தாய்லந்தின் அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தூய்மைக்கேட்டு நிலவரத்தால் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தாய்லந்தின் அரசங்கம்

(படம்: Reuters)

பேங்காக்கின் காற்றுத் தூய்மைக்கேட்டு நிலவரத்தால் பதற்றமடைய வேண்டாம் என்று தாய்லந்தின் அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

காற்றுத் தூய்மைக்கேடு இன்று மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டுச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

வாரயிறுதியில் அது மீண்டும் ஆபத்தான நிலையை எட்டலாம் என்றும் அந்நாளேடு கூறியுள்ளது.

சில வெளிநாட்டுக் கண்காணிப்பு இணையத்தளங்கள் கூறுவதுபோல் நிலைமை அவ்வளவு மோசமல்ல என்று தாய்லந்தின் அரசாங்கம் வலியுறுத்துகிறது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு எதிரான குழுக்கள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையை இலக்காகக் கொண்டு மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய விரைவுச்சாலையில் தூசியை அகற்ற நீர்த் தெளிப்பான்களைப் பயன்படுத்துவது, கட்டுமானத் தளங்களில் இருந்து வரும் தூசியைக் குறைக்க புதிய ரயில் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவது ஆகியவை அதில் அடங்கும்.

காற்றின் தரம் மோசமான நிலையை அடையும்போது பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.

காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக சுகாதாரம், சுற்றுப்பயணம் ஆகிய துறைகளில் பொருளியல் இழப்பு அதிகரித்து வருகிறது.

குறைந்தது 80 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்