Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா : கடந்த 3 வாரங்களில் கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150 விழுக்காடு அதிகரிப்பு

இந்தியாவில் கறுப்புப் பூஞ்சை நோய் மோசமாகிவருகிறது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் கறுப்புப் பூஞ்சை நோய் மோசமாகிவருகிறது.

 கடந்த மூன்று வாரங்களில் கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 150 விழுக்காடு அதிகரித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகளிடம் கறுப்புப் பூஞ்சை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் 30,000க்கும் அதிகமானோர் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 2,000 பேர் மாண்டனர்.

மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 7,000க்கும் அதிகமானோர் கறுப்புப் பூஞ்சையால் அவதிப்படுகின்றனர்.

அந்த நோய்க்குச் சிகிச்சையளிக்கும் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா கிருமிப்பரவலை முறியடிக்கப் போராடி வரும் இந்திய சுகாதாரக் கட்டமைப்புக்குக் கறுப்புப் பூஞ்சை கூடுதல் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்