Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 நோயாளிகளின் ரத்த மாதிரிகளைத் திருடிய குரங்குகள்

இந்தியாவில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஒரு குரங்குக் கூட்டம் திருடிவிட்டது.

வாசிப்புநேரம் -
COVID-19 நோயாளிகளின் ரத்த மாதிரிகளைத் திருடிய குரங்குகள்

(படம்: Reuters/Cathal McNaughton)

இந்தியாவில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஒரு குரங்குக் கூட்டம் திருடிவிட்டது.

சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீருட் நகரில் உள்ள அரசாங்க மருத்துவக் கல்லூரியில் நடந்தது.

ஆய்வுக்கூட அதிகாரி ஒருவர் நோயாளிகளின் ரத்த மாதிரிகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, குரங்குகள் திடீரென்று மருத்துவமனை வளாகத்துக்குள் குதித்ததாகவும் அவரைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

குரங்குகள் அவரிடமிருந்து ரத்த மாதிரிகளை பிடுங்கிக்கொண்டு, அங்கிருந்து ஓடிவிட்டன.

குரங்குகள் ரத்த மாதிரிகளைக் கீழே ஊற்றினவா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கல்லூரிக்கு அருகே உள்ள குடியிருப்புப் பேட்டைகளுக்குள் குரங்குகள் சென்றிருந்தால், கிருமித்தொற்று மோசமடையும் என்று குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

COVID-19 நோயாளிகளின் ரத்த மாதிரிகளுடன் குரங்குகள் நேரடித் தொடர்பு ஏற்பட்டால், அவற்றுக்கும் கிருமி தொற்றுமா என்பது குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கிருமித்தொற்று, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்