Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நீல வாழைப்பழமா? அது விரைவில் வழக்கத்தில் வரலாம்

வாழைக்காய் பச்சையாகவும், வாழைப்பழம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ தென்படுவது நமக்குப் புதிதல்ல.

வாசிப்புநேரம் -
நீல வாழைப்பழமா? அது விரைவில் வழக்கத்தில் வரலாம்

(படம்: AFP)

வாழைக்காய் பச்சையாகவும், வாழைப்பழம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ தென்படுவது நமக்குப் புதிதல்ல.

நீல நிற வாழைப்பழங்கள் கேள்விப்பட்டதுண்டா?

அவை விரைவில் பரவலாகக் கிடைக்கலாம்.

Blue Java எனும் வகையைச் சேர்ந்த வாழைப்பழங்கள் இயற்கையான பழங்கள்.அவை ஃபிஜி, பிலிப்பீன்ஸ் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலும் உற்பத்தியாகும்.

நீல வாழைப்பழங்கள் மஞ்சள் வாழைப்பழங்களைவிடக் குளிரான சுற்றுச்சூழல்களில் அதிகம் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

எனவே அவற்றைக் குறைந்த தட்பநிலை கொண்ட சுற்றுச்சூழல்களில் உற்பத்தி செய்வதற்கு அதிக வாய்ப்புண்டு.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக உற்பத்தியாளர்கள் நீல வாழைப்பழங்கள் பக்கம் திரும்பும் நிலைகூட ஏற்படலாம்.

நீல வாழைப்பழங்களின் விதைகள், ஏற்கனவே இணையம்வழி விற்கப்படுகின்றன.

இருப்பினும் அவை மஞ்சள் வாழைப்பழங்களைப் போன்ற சுவையைக் கொண்டிருக்கமாட்டா.

பழங்கள் வெண்ணிலா சுவையைக் கொண்டிருக்குமாம்....

நீல வாழைப்பழங்களுக்கு நீங்கள் தயாரா? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்