Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காற்றுப்பைக் கோளாறு - சீனாவில் மீட்டுக்கொள்ளப்பட்ட 360,000 கார்கள்

ஜெர்மனியின் BMW கார் நிறுவனம் சீனாவிலிருந்து 360,000 கார்களை மீட்டுக் கொள்ளவுள்ளது. காரின் காற்றுப்பையில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம்.

வாசிப்புநேரம் -
காற்றுப்பைக் கோளாறு - சீனாவில் மீட்டுக்கொள்ளப்பட்ட 360,000 கார்கள்

(கோப்புப் படம்: AFP)

ஜெர்மனியின் BMW கார் நிறுவனம் சீனாவிலிருந்து 360,000 கார்களை மீட்டுக் கொள்ளவுள்ளது. காரின் காற்றுப்பையில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம். ஜப்பானிய நிறுவனமான Takata அந்தக் காற்றுப்பைகளை விநியோகித்தது.

2013ஆம் ஆண்டிலிருந்து Takata காற்றுப்பைப் பிரச்சினையுடன் தொடர்புடைய விபத்துகளில் சுமார் 20 பேர் மாண்டனர். அதனைத் தொடர்ந்து உலக அளவில் சுமார் 100 மில்லியன் கார்கள் இதுவரை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

விபத்து ஏற்படும்போது, அதன் பாதிப்பிலிருந்து ஓட்டுநரையும் பயணிகளையும் பாதுகாக்கக் காற்றுப்பை உதவுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்