Images
  • Decomposed Body of a  Girl
    (படம்: Bernama)

மலேசியா: அழுகிய நிலையில் மிட்கப்பட்ட சிறுமியின் சடலம்


மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் அழுகிய நிலையில் ஒரு சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 9) பொதுமக்களில் ஒருவர் சடலத்தைப் புதர் ஒன்றில் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்ட சிறுமி, கடந்த ஜனவரி 30ஆம் தேதி காணாமற்போன 11 வயது சித்தி மசிட்டாவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சடலத்தின் அடையாளத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், சிறுமியின் தாயார் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதம் ஏதும் மீட்கப்படவில்லை.

விசாரணை தொடர்கிறது. 

Top