Images
  • bollywood
    (படம்: CNA)

படப்பிடிப்புகள் தொடங்கினாலும் சிரமப்படும் இந்தியத் திரையுலகம்

இந்தியத் திரையுலகில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. என்றாலும், கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெறவில்லை.

நடிகர், நடிகையர், தொழில்நுட்பர்கள் என்று பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான டாலர் வருமானம் ஈட்டும் திரைப்படத்துறை எதிர்பாராத பல சவால்களைச் சந்தித்து வருகிறது.

மார்ச் மாதம் இந்தியாவில் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதனால் ஏற்பட்ட வருமான இழப்பு பல மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தியத் திரைப்படச் சந்தை சென்ற ஆண்டு பத்து விழுக்காடு வளர்ச்சி கண்டு, 2.6 பில்லியன் டாலரை எட்டியது.

திரையரங்குகளில் கிடைத்த வசூலும், மின்னிலக்க உரிமைகள் மூலம் கிடைத்த வருமானமும் அந்த வளர்ச்சியைச் சாத்தியமாக்கின.

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆள்களை வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்த மகாராஷ்டிர மாநில அரசாங்கம் ஜூன் மாதம் அனுமதியளித்தது.

அதனால், திரைத்துறையினருக்கு சற்றே ஆறுதல். என்றாலும், கட்டுப்பாடுகள் காரணமாக, வேலை செய்வதில் சிரமம் நீடிக்கிறது.

நெருக்கமான காட்சிகளோ, சண்டைக்காட்சிகளோ படமாக்கக்கூடாது.

65 வயதுக்கு மேற்பட்ட நடிக, நடிகையர் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கக்கூடாது.

மருத்துவர், தாதி ஆகியோருடன் அவசர மருத்துவ வாகனமும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டி விதிகள் அறிவிக்கப்பட்டன.

அவற்றைப் பின்பற்றி, இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்த இந்திய அரசாங்கம் சென்ற மாதம் அனுமதியளித்தது.

உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டாலும் நடிக, நடிகையர் சிலர் படப்பிடிப்புத் தளங்களுக்குத் திரும்பத் தயாராய் இல்லை.  

Top